திண்டுக்கல் அருகே சாலை விபத்து – கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு | Three college students were killed in an accident near Dindigul

1322350.jpg
Spread the love

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர்கள் தினகரன்(20), பாலாஜி(10), பிரவீன்(19). நண்பர்களான மூவரும் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் படித்துவந்தனர். இவர்கள் மூவரும், திண்டுக்கல்- நத்தம் சாலையில் கோபால்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வளைவில் திரும்ப முயன்ற கண்டெய்னர் லாரி, இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கிவீசப்பட்டதில் பாலாஜி, பிரவீன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாமடைந்த தினகரனை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார். சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மூவர் உயிரிழந்த விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து போகச் செய்தனர். கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *