நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

Dinamani2f2025 03 032f6isv88al2fwhatsapp Image 2025 03 03 At 8.16.14 Am.jpeg
Spread the love

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தில்  பிரசித்தி பெற்ற கோயில் நத்தம் மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலின் முக்கிய விழாவான மாசிப் பெருந் திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) 4-ந்தேதி அதிகாலை உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து  தீர்த்தக் குடங்களுடன் நத்தத்தில் உள்ள அரண்மனை சந்தனகருப்பு சுவாமி கோயிலை வந்து சேருவர்.

இதைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தீர்த்தம் எடுத்து வந்து ஒன்று சேர்ந்த பக்தர்களை மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக மேளதாளம் முழங்க, வர்ணக் குடை. அதிர்வேட்டுகளுடன், கோவிந்தா கோஷம் முழங்க அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.

அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 7-ந்தேதி இரவு மயில் வாகனத்திலும், 11ந் தேதி சிம்ம வாகனத்திலும், 14 ந் தேதி அன்னவாகனத்திலும்  அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மின்விளக்கு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில்  நகர்வலம் வரும். அப்போது ஆங்காங்கே பக்தர்கள் கூடி நின்று அம்மனை தரிசனம் செய்து வழிபடுவர். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

16ந் தேதி பக்தர்கள் பால்குடமும், 17ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 18-ம் தேதி அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், காந்திநகர் பொதுமக்களால் கழுகுமரம் ஊன்றும்  நிகழ்ச்சியும் பின்னர் மாலையில் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் பூசாரி முதலில் பூக்குழி இறங்க தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவர்.

19-ந்தேதி காலை 9 மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராட்டு விழாவைத் தொடர்ந்து அன்றிரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி  அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில்  உலா வந்து 20 ந்தேதி அதிகாலை கோயிலை சென்றடைவதுடன் விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *