பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 39 ரன்கள்(7 பவுண்டரி, 1 சிக்ஸர்) சேர்த்து விக்கெட்டப் பறிகொடுத்தார். அவருக்குப் பின்னர் பில் சால்ட் 23 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் வீழ்ந்தார்.
முந்தையப் போட்டிகளில் சரியாக விளையாட ஹாரி புரூக் இந்திய அணி பந்து வீச்சாளர்களை 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரி விளாசி திணறடித்தார். வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும் ஜேகப் பெத்தேல் 6 ரன்களிலும் கார்ஸ், ஆர்ச்சர் ரன் ஏதுமின்றி வெளியேறினர்.
முடிவில் 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த 5 போட்டிகளை 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. மேலும், இந்திய அணி டி20 தொடரை சொந்த மண்ணில் 17 வது முறையாக வென்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.