நாராயணன் தலைமையிலான எல்பிஎஸ்சி குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி உள்ளது.
இஸ்ரோ சமீபத்தில் சந்திரயான் 4 மற்றும் ககன்யான் போன்ற லட்சியத் திட்டங்களுக்கு முக்கியமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பமான ஸ்பேடெக்ஸை அறிமுகப்படுத்தியதற்காக இஸ்ரோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. இது சந்திரயான் 4 (ஒரு சந்திர திட்டம்) மற்றும் ககன்யான் (இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டம்) போன்ற லட்சிய எதிர்கால திட்டங்களுக்கு அவசியமானது. இந்த சாதனை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் உயரடுக்கு பட்டியலில் இந்தியாவை இடம்பிடிக்கச் செய்துள்ளது.
வி.நாராயணனின் பணிக்கு ஐஐடி கரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கம் (ஏஎஸ்ஐ) தங்கப் பதக்கம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) தேசிய வடிவமைப்பு விருது உள்ளிட்ட ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இஸ்ரோவில் தமிழர்கள்
இஸ்ரோவில் தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ‘ரோகிணி-2’ செயற்கைக்கோளை ஏவிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராக்கெட்டுக்களுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது.
இவரைத் தொடர்ந்து சந்திரயான்-1, மங்கள்யான் செயற்கைக் கோள்களுக்கான திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.
ஜிசாட்-12 பணியின் திட்ட இயக்குநராக ந.வளர்மதி, இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவன், இவரது பதவி காலத்தில் தான் முதன் முதலாக சந்திரயான் நிலவுக்கு அனுப்பப்பட்டது. சந்திரயான் – 2 பணியின் திட்ட இயக்குநராக வனிதா முத்தையா பணியாற்றினார்.
சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக நிகர் ஷாஜி, நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான் – 3 திட்டத்தின் இயக்குநராக பி.வீரமுத்துவேல் என பல தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.