புதுவை மாநில தவெக செயலாளா் மரணம்

Dinamani2f2024 10 212fr1rl6pwq2f2 7 21pyp18 2110chn 104.jpg
Spread the love

புதுச்சேரி: தவெக புதுவை மாநிலச் செயலா் சரவணன், திங்கள்கிழமை திடீரென மரணம் அடைந்தாா்.

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுவை மாநில செயலராக இருந்தவா் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சோ்ந்தவா். இவருக்கு மனைவி தேவி, மகன் உள்ளனா்.

கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்சி ஆனந்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த இவா், விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரி திரும்பினாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்தபோது சரவணனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே சரவணன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *