தில்லியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி முன்னாள் முதல்வர் அதிஷியின் பதிவை மறுபகிர்வு செய்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால், “அனைவரின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் எக்ஸ் தளத்தில், “தில்லியில் 10 நிமிடங்களுக்கு முன்பு நிலநடுக்கம் உணரப்பட்டது, எங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். மேலும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.