மனிதர்களை இழுக்க மூழ்குவதுப்போல் நடிக்கும் முதலைகள்? விடியோ வைரல்!

Dinamani2f2025 01 122fhpixpazb2fcrocs.png
Spread the love

இந்தோனேசியா நாட்டிலுள்ள ஓர் நதியில் மனிதர்களை கவர்ந்து தண்ணீருக்குள் இழுக்க முதலைகள் மூழ்குவதுப்போல் நடிப்பதாக விடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

அந்நாட்டின் பொர்னியோ மாகாணத்திலுள்ள பரிட்டோ நதியில் உப்பு நீர் முதலைகள் தண்ணீருக்குள் தலைகீழாக திரும்பி உதவிக் கேட்பதுப்போல் அதன் கால் விரல்களை விரித்தப்படி வெளியே நீட்டுகின்றன.

இது மனிதர்கள் தான் யாரோ மூழ்குகிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதாகவும், அதை நம்பி தண்ணீரில் இறங்கும் மனிதர்களை கொன்று உண்ண இவ்வாறு செய்வதாகக் கூறி விடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!

இந்த விடியோ இணையத்தில் சுமார் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், உயிரியல் நிபுணர்கள் முதலைகள் நடிக்கின்றன எனும் கருத்தை முற்றிலுமாக மறுக்கின்றனர்.

அந்த முதலைகள் அந்த செயல்களை வேறு ஏதேனும் இரைகளை பிடிக்க எதர்சையாக செய்திருக்கக் கூடும் எனவும் அவை மனிதர்களை கவர்ந்திழுக்க இவ்வாறு செய்கின்றன என்பது முற்றிலும் தவறான செய்தி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், சர்வதேச அளவில் ஓர் ஆண்டில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் முதலைகளினால் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அதில், மிகவும் ஆபத்தான உப்பு நீர் முதலைகளினால்தான் மனிதர்கள் அதிகம் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *