முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட முறைகேட்டை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்புணர்வு | Awareness through QR Scan in Govt Primary Health Centres

1340199.jpg
Spread the love

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர் களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரி வித்து, பெயரை பதிவு செய்து, “பிக்மி” எண் பெற்றவுடன் கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத் தில் ரூ.6,000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 9-வது மாதத் தில் ரூ.2,000 வழங்கப்படுகிறது. அதேபோல, பேறு காலத்தில் 3-வது மற்றும் 6-வது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட் டகங்கள் வழங்கப்படுகிறது. அதில், உடல் திறனை மேம்படுத் தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், வாளி, ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத் திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.

இதுவரை தமிழகம் முழு வதும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.12,000 கோடி நிதி 1.30 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட் டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் சில இடங்களில் உரிய பயனாளி களுக்கு சென்றவடைவதில்லை என புகார் எழுந்தது.

குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம், கடியாபட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் தணிக்கை குழு ஆய்வு நடத் தியது. இதில் கடந்த 5 ஆண்டு களில் அங்கு பணிபுரிந்த ஊழியர் கள்பயனாளிகள் பெயரில் போலி பட்டியல் தயாரிக்கப்பட்டு 16 வங்கிக் கணக்குகளில் ரூ.18.60 லட்சம் தொகையை வரவு வைத் தது தெரியவந்தது. இதில் ஒருவட்டார கணக்கு உதவியாளர்,ஒரு இளநிலை உதவியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட் டது. அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகப்பேறு நிதி யுதவி திட்டம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்பு ணர்வு சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. அதில், முத்துலட்சுமி ரெட்டி திட்டம் குறித்த விளக்கம், குழந்தைகளுக்கான தடுப்பூசி, கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி, இலவச ஊட்டச்சத்து பெட்டகம், ரத்தசோகை தடுப்பு உட்பட பல் வேறு தலைப்புகளின்கீழ் 19 வகையான விழிப்புணர்வு குறும்பட விடியோக்களின் “க்யூ.ஆர்” குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. செல்போனில் கூகுள் இணையதளத்தில் உள்ள கூகுள் லென்ஸ் பயன்படுத்தி அந்த க்யூஆர் குறி யீடுகளை ஸ்கேன் செய்து, அந்த விவரங்களை அறிந்து கொள் ளலாம். இதன்மூலம் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பொது சுகா தாரத் துறை தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *