இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 1-0 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, டிமிட்ரி பெட்ரேடோஸ் (90+3’) கோலடித்தாா். இந்த வெற்றியை அடுத்து, நடப்பு சாம்பியனாக போட்டியில் களம் கண்ட மோகன் பகான், சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. போட்டி வரலாற்றில் இவ்வாறு பட்டத்தை தக்கவைத்த முதல் அணியாக மோகன் பகான் வரலாறு படைத்திருக்கிறது.
போட்டியில் அந்த அணி 22 ஆட்டங்களில் 16 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி என 52 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக 42 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கும் எஃப்சி கோவா, எஞ்சிய ஆட்டங்களில் வென்றாலும் மோகன் பகானை முறியடிக்க வாய்ப்பில்லாமல் போனதை அடுத்து, மோகன் பகான் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.