உலகில், அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்கா இப்போதும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. புதிய அதிகார வரிசை உருவாகி வருகிறது. இந்தியா, ரஷியா, சீனாவைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 35 சதவீதமாக இருக்கும் நிலையில், ஜி7 நாடுகளின் வளர்ச்சியோ வெறும் 28 சதவீதம்தான்.
அமெரிக்கா இத்தனை அழுத்தம் கொடுத்தும், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்றால், அதிகார வரிசை மாறிவிட்டதற்கான அறிகுறிதானே.
எனவே, இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது என்பது, யானையை எலி தாக்குவது போலத்தான். இது நகைச்சுவையாக இருக்குமே தவிர அச்சுறுத்தலாக மாறாது.
அமெரிக்க அதிபரின் நடவடிக்கை, பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையே மேலும் ஒற்றுமையை அதிகரித்து, புதிய அதிகார வரிசை பலமாகி வருகிறது.
அதிக வரி விதித்து, இந்தியாவுக்கான அமெரிக்க கதவுகளை மூடினால், இந்தியா தன்னுடைய பொருள்களை ஏற்றுமதி செய்ய வேறு நாடுகளைத் தேடும். அமெரிக்காவுக்கு மட்டும்தான் பொருள்களை இந்தியா அனுப்ப முடியாது. ஆனால், பிரிக்ஸ் நாடுகளை அதன் ஏற்றுமதியில் இந்தியா சேர்த்துக்கொள்ளப்போகிறது.
அமெரிக்க கொள்கையால்தான், சராசரியாக இருந்த பிரிக்ஸ் அமைப்பு மேலும் விரிவடைந்து, அந்த நாடுகளுக்குள் ஒருங்கிணைப்பு அதிகரித்து, மேலும் பல ஒப்பந்தங்கள் வெற்றியடைந்து, மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தையே மாற்றியக்கப்போகிறது என்றும் எச்சரித்துள்ளார் வோல்ஃப்.