சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும்தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, 2026 தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடர உள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வெடுத்தார். தற்போது அவரதுஉடல்நிலை சீராகியுள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நவ. 7-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன் ராஜ் தலைமையில் நவ.7-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.