தாய்லாந்தின் இந்த சமத்துவ திருமண மசோதா, ‘ஆணும் பெண்ணும்’ என்பதை ‘தனிநபர்கள்’ என்றும் ‘கணவனும் மனைவியும்’ என்ற வார்த்தைகளை ‘திருமணமான தம்பதிகள்’ என்றும் மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு முழு சட்ட, நிதி மற்றும் மருத்துவ உரிமைகளை வழங்குகிறது.
இதையடுத்து ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது தாய்லாந்து.
ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது நாடாக தாய்லாந்து, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளது.