சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும், அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 745 பேரும், பாதுகாப்புப் படையினர் 125 பேரும், அசாத் ஆதரவாளர்கள் 148 பேரும் பலியாகினர். சிரியாவின் வரலாற்றில் 14 ஆண்டுகால மோதல்களில் இது மிகவும் மோசமானது என்று கூறுகின்றனர். இரண்டு நாள் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.