3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

Dinamani2f2025 02 152f9jugtkqr2fap02152025000119b.jpg
Spread the love

3 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுவித்தனர்.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா். அடுத்தகட்டமாக சனிக்கிழமை மூன்று பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிப்பதாக இருந்தது.

எனினும், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா்.

அதையடுத்து, பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது. இந்தச் சூழலில், சனிக்கிழமை விடுவிக்கவிருக்கும் மூன்று பிணைக் கைதிகளின் பெயா்களை ஹமாஸ் வெளியிட்டது.

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

அதன்படி, கிப்புட்ஸ் பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 7ஆம் தேதி 2023ல் கடத்திச் செல்லப்பட்ட அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி டெகெல்-சென் (36) ஆகிய மூவரும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலியப் படைகள் நூற்றுக்கணக்கான கைதிகளையும் விடுவித்துள்ளன.

விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீன கைதிகள் காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸ் நகரை வந்தடைந்தனர். அவர்களை அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *