5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா’ திரைப்படம்

Dinamani2f2025 03 032fnrwcw7d42foscar.jpg
Spread the love

அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது.

இப்படத்திற்காக இயக்குநர் ஷான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என ஷான் பேகர் 4 விருதுகளை வென்றார்.

4 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்த ஷான் பேகர் 4 விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: ஒருவர் கைது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *