இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரண்டு அணிகளும் 3 டி20 போட்டிகள், 50 ஓவர் போட்டிகள் 3-லிம் விளையாட உள்ளன.
சூர்யகுமார்யாதவ் கேப்டன்
இதில் இந்திய அணியில் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். 50 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார்.
டி20 போட்டியில் இருந்து ரோகித்சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்று உள்ளதால் இந்திய அணியில் முழுவதும் இளம் வீரர்கள் களம் காண்கிறார்கள்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று(27ந்தேதி) பல்லேகலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறஉள்ளது. இதற்காக 2 அணிவீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன்கில்(துணை கேப்டன்),ஜெய்ஸ்வால்,ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ரியான்பராக், சஞ்சுவ் சாம்சன்(விக்கெட் ககீப்பர்),கலீல் அகமது.