சியாச்சின் முகாமை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்
சியாச்சின் அடிவார முகாமுக்கு இன்று (26&ந்தேதி) பயணம் செய்த டியரசுத்தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 1984 ஏப்ரல் 13 அன்று சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் மேகதூத் தொடங்கியதிலிருந்து தியாகிகளான வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தியாகத்தின் சின்னமாக விளங்கும் சியாச்சின் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார்.
முப்படைகளின் தலைவர் என்ற முறையில், அவர்களைப் பற்றி தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும், குடிமக்கள் அனைவரும் அவர்களின் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு வாழ்நாள் நன்றி- சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி
1984 ஏப்ரலில் ஆபரேஷன் மேகதூத் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய ராணுவத்தின் துணிச்சல் மிக்க வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர் என்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
தியாகம் மற்றும் சகிப்புத்தன்மை
ராணுவ வீரர்கள் கடுமையான வானிலையை எதிர்கொள்கின்றனர். கடுமையான பனிப்பொழிவு மற்றும் மைனஸ் 50 டிகிரி வெப்பநிலை போன்ற கடினமான சூழ்நிலைகளில், முழு ஈடுபாட்டுடனும் விழிப்புணர்வுடனும் அவர்கள் இந்த எல்லைப் பகுதியில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
தாய்நாட்டைப் பாதுகாப்பதில் தியாகம் மற்றும் சகிப்புத்தன்மையின் அசாதாரண உதாரணங்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள். அனைத்து இந்தியர்களும் உங்களின் தியாகம் மற்றும் துணிச்சலை அறிந்திருக்கிறார்கள். நாங்கள் உங்களை மதிக்கிறோம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வீரர்களிடம் கூறினார்.