பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார்

Narendra Modi
Spread the love

கார்கில் போர் கடந்த 1999 ம் ஆண்டு மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்த இந்த போரில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் துரத்தியடித்தனர்.

Kargilwar01

பிரதமர் மோடி

இந்த நிலையில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.மேலும் ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம்

இந்த ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.
இது லே-க்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு&படும்&தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும்.
இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும்.

ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும்.

மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *