“இதுக்கு எண்ட் கார்டே கிடையாது” , மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி : சவரனுக்கு ரூ.5040 உயர்வு – Kumudam

Spread the love

நேற்றைய தினம் காலையில்  தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,030 விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,240 விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை உயர்ந்த போதிலும், காலையில் வெள்ளி விலை கடும் சரிவை கண்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை ஆனது. 

மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,160 விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காலையில் குறைந்த வெள்ளி விலை, மாலையில் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300 விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கு விற்பனை ஆனது. 

இன்று மீண்டும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ 20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ3,20,00 விற்பனை செய்யப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *