இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points

Spread the love

இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந்தப் போன்காலுக்கு பின், மேலே சொன்ன ‘ஹேப்பி நியூஸை’ தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர் இருவரும்.

இந்த ஹேப்பி நியூஸிற்கு பின்னால் இருக்கும் ஒப்பந்தம் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலின் முக்கிய பாயின்ட்கள் இதோ…

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

> இந்தியாவின் மகுடத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு ரத்தினம். இது மோடியின் ஆட்சிக் காலத்தை உரக்க சொல்லும்.

> இந்த ஒப்பந்தம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 140 கோடி இந்தியர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கும்.

> போட்டியாளர்களுக்கு மத்தியில், இந்தியாவே அமெரிக்காவிடம் இருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

> அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை பல மாதங்களாக சென்று கொண்டிருந்தது. பல பிரச்னைகள், தடைகளைத் தாண்டித் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.

> மோடி எப்போதுமே இந்திய விவசாயிகள், கால்நடை வைத்திருப்பவர்கள், பால் பொருள் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பார். ஆக, இந்த ஒப்பந்தத்திலுமே விவசாயம் மற்றும் பால்பொருள் துறையை மோடி பாதுகாத்திருக்கிறார்.

> சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, இன்ஜினீயரிங் பொருள் துறை, ஜவுளித்துறை, தோல் துறை, நகைகள் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தத்தில் பெரிய வாய்ப்புகள் உள்ளன.

> இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹை-டெக் துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும்.

> இந்த ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களையும் வலுப்படுத்தும்.

> இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களையும் இரு நாடுகளும் விரைவில் தெரிவிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *