இளம் வீரர்களை வழிநடத்துவதில் மகிழ்ச்சி
இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான, நாதன் மெக்ஸ்வீனி, கூப்பர் கன்னோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அவர்களைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.