உதகையில் 426 பயனாளிகளுக்கு ரூ.12.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல் | Rs.12 Crore 14 Lakh Welfare Assistance to 426 Beneficiaries on Udhagai: Minister K. Ramachandran Provided

1315677.jpg
Spread the love

உதகை: உதகையில் 426 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம், 100 பழங்குடியினர்களுக்கு ரூ.5 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வங்கிகள் மூலம் கடனுதவி உட்பட 426 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, துணை ஆட்சியர் கௌஷிக் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *