உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த எஸ்யூவி ஆட்டோரிக்ஷா மீது பின்னால் மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.