இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஒடிஸா எஃப்சி அணியினா். ஒடிஸா அணியில் ராய் கிருஷ்ணா, மௌா்டடா ஃபாலும், ஈஸ்ட்பெங்கால் தரப்பில் ஸ்ட்ரைக்கா் டிமிட்ரியோஸும் கோலடித்தனா்.