கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.100&க்கும் மேற்பட்டோர் இன்னும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிக்குழுவினர் விசாரணை நடத்தி கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தமோதரன், இவரது மனைவி சந்திரா ஆகியோரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
“மிதமாக குடிங்க”- கமல் அட்வைஸ் சரியா ?
இதற்கடையே கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா, லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் , கடலூர் மாவட்டம் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 பேர் கைது
இதுவரை கள்ளக்குறிச்சி கள்ளச் சாரய சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்:
மெத்தனால் விஷமுறிவு மருந்து இல்லாதது உயிர்பலி அதிகரிக்க காரணமா?