கான்ஸ்டாஸுக்கு ஆணவமில்லை: ஆஸி. ஆலோசகர் பேட்டி!

Dinamani2f2025 01 072fk7fmt96z2fani 20250104113015.jpg
Spread the love

நியூ சௌத் வேல்ஸ் பயிற்சியாளர் கிரேக் செப்பேர்டு ஆஸி. இளம் தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸின் அதிரடி பாணி அவரை நீண்டகாலம் அணியில் வைத்திருக்குமெனக் கூறியுள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் தொடரில் மெல்போர்னில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.

பும்ரா ஓவரில் ரேம்ப் ஷாட் அடித்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினார். இந்தத் தொடரில் பும்ராவுக்கும் அவருக்கும் போட்டி வலுவாக இருந்தது. கான்ஸ்டாஸ் 3 முறையும் பும்ரா ஒருமுறையும் அதில் வென்றார்கள்.

விராட் கோலி கான்ஸ்டாஸை இடித்து 20 சதவிகிதம் அபாரதம் பெற்றார்.

இந்த நிலையில் கான்ஸ்டாஸின் பயிற்சியாளர் கிரேக் செப்பேர்டு கூறியதாவது:

கான்ஸ்டாஸை பற்றி விவரிக்க நான் ஆணவம் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டேன். சாம் கான்ஸ்டாஸ் மிகவும் அதிரடியான வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் அடித்த சில ஷாட்டுகள் டி20 கிரிக்கெட்டில் அடிப்பதுபோல் இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால், அது அந்த நேரத்தில் பிரச்னைக்கான ஒரு தீர்வாக மட்டுமே கான்ஸ்டாஸ் அதை உபயோகித்தார்.

பலரும் கான்ஸ்டாஸை ஒழுங்கற்ற முறையில் விளையாடுடியதாக விவரிக்கிறார்கள். ஆனால், இன்னும் சில ஆண்டுகள் கடந்தபிறகு புரியும். நாங்கள் அவரை தேவையானதுக்கு ஏற்றபடி விளையாட வைப்போம். அவர் நீண்டகாலம் அணியில் இருப்பார்.

கோலி கான்ஸ்டாஸிடம் நடந்துகொண்டது இழிவான செயல். அதற்காக கோலி இன்னும் அதிகமாக தண்டிக்கப்படிருக்க வேண்டும்.

பும்ராவின் செய்கையினால் கான்ஸ்டாஸ் அல்லது அந்த சூழ்நிலை சற்று பாதிக்கப்படிருக்கும். அதனைக் கடந்து வந்த கான்ஸ்டாஸ் அடுத்ததாக இலங்கை உடனான தொடரில் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *