சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கு தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தலைநகரான சண்டீகருக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடிய நிலையில், அப்பகுதி யூனியன் பிரதேசமாக்கப்பட்டது.
இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக உள்ள சண்டீகா், தற்போது பஞ்சாப் ஆளுநரின் நிா்வாகத்தின்கீழ் உள்ளது. பொது கட்டட வளாகத்திலேயே இரு மாநில சட்டப் பேரவைகள் மற்றும் தலைமைச் செயலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சண்டீகர் தங்களுக்குதான் சொந்தம் என்று இரு மாநில அரசுகளும் மோதிக் கொண்டனர்.