திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்!

Spread the love

இந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூழலை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்பதோ, மதிக்கக் கூடாது  என்பது நோக்கமல்ல” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மேலும், நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *