தீராத சொத்து தகராறு; தங்கும் விடுதியில் வியாபாரி குத்திக் கொலை; திருப்பூரில் நடந்தது என்ன?

Spread the love

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர், அவரது உறவினரான பல்லடம் பகுதியில், பனியன் துணி வியாபாரம் செய்து வரும் செந்தில்நாதன் என்பவரைத் தனது அறைக்கு அழைத்து உள்ளார். அங்கு வந்த செந்தில்நாதனுக்கும், அமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த அமரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்நாதன் வயிறு மற்றும் கழுத்தில் குத்தியும், கழுத்தை அறுத்தும் உள்ளார். ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து வெளியே வந்த செந்தில்நாதன் 3-ஆவது மாடியில் அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸார் கொலை செய்யப்பட்ட செந்தில்நாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், “கொலை செய்யப்பட்ட செந்தில்நாதனுக்கும் கொலையாளி அமரனும் உறவினர்கள். இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாக சொத்து தகராறு இருந்து வந்ததுள்ளது. இன்று அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அமரன், செந்தில்நாதனை அறைக்கு அழைத்துள்ளார்.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், அமரன் ஏற்கெனவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்நாதனின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர் கழுத்தையும் அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அவரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற செந்தில்நாதன் மூன்றாவது மாடிக்கு வந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமரன் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *