குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இடமான பென்சில்வேனியா நகரத்தின் பட்லரில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நாளை(அக்.5) பிரசாரம் நடத்தவுள்ளார். இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும், டெஸ்லா நிறுவனத்தலைவருமான எலான் மஸ்க்கும் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதுகுறித்து எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் “நான் ஆதரவாக இருப்பேன்!” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரும் டிரம்பின் பிரசாரத்தில் எலான் மஸ்க் கலந்துகொள்ளவுள்ளதை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர், முன்னாள் அதிபரின் பிரசார நிகழ்ச்சியில் பொதுவெளியில் தோன்றிய முதல் நிகழ்வாக இந்த நிகழ்வு அமையவுள்ளது. எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கான தனது ஆதரவை அதிகப்படுத்தி, அரசியலில் அதிக முதலீடு செய்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் வலது காதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவரது ஆதரவாளரான கோரி கம்பரேடோர் இறந்த அதே இடத்தில் சனிக்கிழமை பிரசாரப் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தில், கம்பேரேட்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், டிரம்புடன் குடியரசுக் கட்சியின் ஓஹியோ சென்னும் கலந்துகொள்வார். ஜே.டி. வான்ஸ், டிரம்பின் மகன் எரிக் டிரம்ப், அவரது மருமகள் மற்றும் லாரா டிரம்ப் உள்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.