பந்த் எதிரொலி: புதுச்சேரியில் நாளை 8 வகுப்பு வரை விடுமுறை அறிவித்த முதல்வர்!  | tomorrow Bandh in Puducherry: Class 1 to 8 holiday CM Rangasamy announced

1312471.jpg
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் நாளை (செப்.18) பந்த் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இண்டியா கூட்டணி கட்சிகள் புதன்கிழமை பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஆட்டோக்கள் டெம்போக்கள் ஆகியவை இயங்காது. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது என்று ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி 1 முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்துள்ளதாக பாஜக எம்எல்ஏ ஜான் குமார் ஆடியோ மூலம் வாட்ஸ்அப்பில் மக்களுக்கு தெரிவித்தார். இது பற்றி முதல்வர் ரங்கசாமிடம் கேட்டதற்கு, “நாளை பந்த் போராட்டம் காரணமாக பஸ்கள் ஆட்டோக்கள் முழுவதுமாக இயங்குவதில் சிரமம் உள்ளது. அதனால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *