தொடர்ந்து, “நம்ம மக்கள் இந்த விசிலை ஊதுறதுல தீய சக்தியும் ஊழல் சத்தியும் தெறிச்சு ஓடும்.
தேர்தல்ல மூன்று முனை போட்டி, நான்கு முனை போட்டி என்கிறார்கள்… சொல்றவங்க சொல்லிட்டு இருக்கட்டும்.
ஒரு பக்கம் மக்கள் சக்தியுடன் தவெக, இன்னொரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அப்புறமா, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி” என அதிமுகவையும் விமர்சித்திருக்கிறார்.

விசில் சின்னம் இல்லாத ஊரே இல்ல. என்னோட அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பி என எல்லாரும் தவெகவுக்கு ஓட்டுப்போடுறதை யாராலையும் தடுக்க முடியாது.
தீயசக்தியை வீழ்த்த இந்த தூய சக்தியால மட்டும் தான் முடியும். டப்பா எஞ்ஜின், ஓட்ட எஞ்சின் என எவ்வளவு எஞ்சின் வந்தாலும், டாப் எஞ்சின் நம்ம தவெகதான், இதை மக்களே முடிவு பண்ணீட்டாங்க. மாபெரும் மக்கள் சக்தி நமக்கு இருக்கு” என்று பேசியிருக்கிறார்.