கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய பொதுச் செயலாளர் வி.நரசிம்மன், கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அணுகுவோம் என்றார்.