புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும்.
வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், “தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும்” என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த அவர், “நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில் பேசுகிறார்” என்றார்.
அதையடுத்து, “நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம்.
எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார்.