புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை | puducherry karaikal schools and collages leave for tomorrow

1341283.jpg
Spread the love

புதுச்சேரி: புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தொடர்ந்து மழை பொழிவு இருந்ததால் இன்று (நவ.27) புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் மழைக்கால நடவடிக்கைகள் புதுச்சேரி, காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுச்சேரி, காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். எனினும் புதுச்சேரியில் இன்று மழை பொழிவு அதிகளவில் இல்லை. எனினும் மழை பொழிய வாய்ப்புள்ளதால் அரசு துறைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *