மூக்குத்தி அம்மன் -2 இயக்கும் சுந்தர். சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dinamani2f2024 09 162fq02713nm2fsundarc.jpg
Spread the love

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியிருந்தார்கள்.

ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து மூக்குத்தி அம்மன் -2 படத்தினை தயாரிக்கிறார்கள். இதில் நயன்தாரா நடிக்கிறார்.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *