இதையும் படிக்க: இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்
உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை வருமானத்திலிருந்து சுமார் ரூ.15,700 கோடி முன்னதாகச் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் தேசிய சிறு சேமிப்பு நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வுக்கு ரூ.10,000 கோடி ஆக மொத்தம் ரூ.40,000 கோடி முன்கூட்டியே கடன் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தனது கடன் பொறுப்பை வெற்றிகரமாக குறைத்து வருகிறது என்றார் அந்த அரசு அதிகாரி.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 2024-25 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.1.68 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.