சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த ஒராண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை பல மடங்கு உயர்ந்து மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையா ஆனது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை நேற்று குறைந்தது. அந்த வகையில், நேற்றைய கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வார கடைசி நாளான இன்று சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ 1,03,200 ஆக விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ 100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கு விற்பனை ஆகிறது.
அதே போன்று வெள்ளியும் இன்று கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு ரூ. 7 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
