வெளிநாடுகளில் இருந்து தங்க நகை: மத்திய அரசு புதிய தளர்வு என்ன?|Buying Gold Abroad? India Just Made It Easier

Spread the love

துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்தியாவை விட, தங்க விலை குறைவுதான்.

அதனால், அங்கே செல்லும் நம் மக்கள் தங்கம் வாங்கி வருவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதற்கும் ஒரு செக் உண்டு.

குறிப்பிட்ட அளவிற்கு மேல், வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் “தங்க நகைகளுக்கு’ வரி கட்ட வேண்டும். தங்க நகையாக இல்லாமல், தங்க நாணயம், தங்க ஆபரணமாக வாங்கினால், எத்தனை அளவாக இருந்தாலும், வரி கட்ட வேண்டும்.

தற்போது தங்க நகையைக் கொண்டு வரும் நடைமுறைகளில் சிறிய தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.

முன்பு, பெண்களும், 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளும் ரூ.1 லட்சம் மதிப்பு வரையில் 40 கிராம் எடை உள்ள தங்க நகைகளைக் கொண்டு வரலாம்.

ஆண்கள் ரூ.50,000 மதிப்பு வரையில் உள்ள 20 கிராம் எடை உள்ள தங்க நகைகளைக் கொண்டு வரலாம்.

அதாவது ரூ.1 லட்சம் வரை 40 கிராமிற்குள் எத்தனை நகை வாங்கி வர முடிகிறதோ, அவ்வளவு நகைகளைத்தான் வாங்கி வர முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *