மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸின் வெற்றி குறித்து அவரது மனைவி அம்ருதா ஃபட்னவீஸ் பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று(டிச. 5) பதவியேற்றுக் கொண்டது.
இதையும் படிக்க..: கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை: முகநூலில் நீதி கேட்கும் பெற்றோர்!
மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அம்ருதா ஃபட்னவீஸ் கூறும்போது, “தேவேந்திர ஃபட்னாவீஸின் அரசியல் வெற்றிக்கு பொறுமை மற்றும் விடாமுயற்சியின் முக்கிய குணங்களாக உள்ளன. தேவேந்திர ஃபட்னவீஸ் 6-வது முறையாக எம்எல்ஏவாகவும், 3-வது முறையாக முதல்வராகவும் பதவியேற்றதில் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க..: புஷ்பா 2: நெரிசலில் சிக்கி பெண் பலி; அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!
2014-2019 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பணியாற்றிய ஃபட்னவீஸ், 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ‘நான் மீண்டும் வருவேன்’ என்று முழக்கமிட்டார்.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் 105 இடங்களில் வெற்றிபெற்றாலும், சிவசேனையுடனான பாஜகவின் கூட்டணி முறிந்ததால், அவர் மீண்டும் முதல்வராக முடியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் அஜீத் பவாருடன் துணை முதல்வராக 80 மணிநேரம் மட்டுமே இருந்தார்.
ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ஏற்றதால், 2022-லும் ஃபட்னவீஸால் முதல்வராக முடியவில்லை. தற்போது பேரவைத் தேர்தலில் மகாயுதி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதால், ஃபட்னவீஸ் மீண்டும் 3-வது முறையாக முதல்வராகியுள்ளார்.