ஃபார்மில் இல்லாமல் இருந்தேனா? ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டி!

Dinamani2f2024 12 272f3b8597q72fap24362058643471.jpg
Spread the love

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். எதிர்பாராத விதமாக பந்து ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்தார்.

இந்த சதத்தின்மூலம் ஸ்மித் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள், பிஜிடி தொடரில் அதிக சதங்கள் என முதலிடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் டெஸ்ட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

அதிர்ஷடமும் நம்பிக்கையும் தேவை

சில நேரங்களில் பந்தினை நன்றாக அடித்தாலும் ரன்கள் குவிக்க முடியாது. ஆனாலும் நான் நன்றாகவே பேட்டிங் செய்வதாக உணர்வேன். ஃபார்மில் இல்லாமல் இருப்பதற்கும் ரன்கள் அடிக்காமல் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால், நான் நன்றாகவே விளையாடி வந்தேன். நான் சொல்லவருவது நமக்கு தேவை நம்பிக்கை. நீங்கள் முயற்சிப்பதன்மீது நம்பிக்கை வேண்டும்.

நீண்ட காலமாக விளையாடிவரும் எனக்கு உயர்வும் தாழ்வும் இருப்பது சாதாரணமானது.

இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவிக்க நமக்கு அதிர்ஷ்டம் தேவை. கடந்த வாரம் என்னால் முடிந்த அளவுக்கு ரன்கள் அடித்தேன். நான் பலமுறை நடுவர்களின் தீர்ப்புகளால் ஆட்டமிழந்துள்ளேன். அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நன்றாகவே விளையாடியுள்ளேன். அதனால்தான் சிறிது அதிர்ஷ்டம் தேவை எனக் கூறுகிறேன். ஆனால், இதெல்லாம் மாறுமென நீங்கள் நம்பவேண்டும்.

நானும் பாட் கம்மின்ஸும் விளையாடும்போது திட்டம் எதுவுமில்லை. அப்படியே சென்று விளையாடினோம். கம்மின்ஸ் சிறப்பாக விளையாடினார். மிகவும் நேர்மறையான நோக்கத்துடன் விளையாடினார். நாங்கள் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அதிலிருந்துதான் நாங்கள் ஆட்டத்தின் கணத்தினைப் பெற்றோம் என நினைக்கிறேன் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *