ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண நிதி | actor karthi hand over 15 lakh check to udhayanidhi for fengal cyclone relief

1342591.jpg
Spread the love

சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.

இது தொடர்பாக தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும், உழவன் அமைப்பின் நிறுவனருமான கார்த்தி ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார்.

அவருக்கு என் அன்பும், நன்றியும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல், கனமழை பாதிப்பு நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *