ஃபென்ஜால் புயலால் பெய்த கடுமையான மழையின் காரணமாக, புதுச்சேரி நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது மற்றும் வீதிகளில் நீர் முழங்கால் அளவிற்கு உயர்ந்துள்ளது.
500 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ள நிலையில், கடல் நீரின் அதிக அழுத்தம் காரணமாக, வாய்க்கால்கள் வழியாக மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதையும் படிக்க: சேலத்தில் கனமழை: வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகள்!
மின்சார விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவசர தகவல்களுக்கு, பொதுமக்கள் 1077 அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை 0413-2353850 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.