‘ஃபெயில் மினிஸ்டர்’.. 2 மாதத்தில் 17 இந்தியர்கள் பலி: காங்கிரஸ்

Dinamani2f2024 072fd8557093 37e5 427b 837f 434b282b25752faswini.jpg
Spread the love

மும்பை – ஹெளரா விரைவு ரயில் தடம் புரண்டது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் அருகே இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:

“மற்றொரு ரயில் விபத்து. ஆனால் ‘ஃபெயில் மினிஸ்டரின்’ விளம்பரம் மட்டும் தொடர்கிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 3 விபத்துகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

இந்த விபத்துகளில் 17 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்களாக மத்திய ரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஸ்ணவ் பதவி வகிக்கும் நிலையில், இந்தாண்டில் மட்டும் 6 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில், 5 பயணிகள் ரயில் ஆகும்.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதத்தில் ஒரு விபத்தும், ஜூலையில் இரண்டு விபத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *