“ஃபேவரிட் நடிகரான சூப்பர் ஸ்டாரை சந்தித்துப் புகைப்படம் எடுப்பது கனவாக இருந்தது!” – சிபி சக்ரவர்த்தி |”It was a dream to meet and photograph my favorite actor, the superstar!” – Cibi Chakravarthy

Spread the love

அந்தப் பதிவில் அவர், ” ஒரு காலத்தில், சிறுநகரத்திலிருந்து வந்த ஒருவனுக்கு, அவனுடைய ஃபேவரிட் நடிகரான சூப்பர் ஸ்டாரை சந்தித்துப் புகைப்படம் எடுப்பது கனவாக இருந்தது.

அந்தக் கனவுதான் அவனுடைய சினிமா ஆர்வத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பெருங்கனவு ஒரு நாள் நிகழ்ந்தது.

அதன் பிறகு, அதே நடிகரை வைத்து படம் இயக்குவது அவனுடைய பெரிய கனவாக இருந்தது. அது அருகில் வரை வந்து மிஸ் ஆகிவிட்டது.

Thalaivar 173 - Ciby Chakravarthi

Thalaivar 173 – Ciby Chakravarthi

பிறகு, அதுவொரு நாள் நிகழும் என நம்பிக்கையுடன் இருந்தான். அது இன்று நடந்திருக்கிறது.

‘கனவுகள் நனவாகும், அதிசயங்கள் நடக்கும்’ என தலைவர் சொன்ன விஷயங்களையே நான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.

சில சமயங்களில், வாழ்க்கை கனவுகளைத் தாண்டி இன்னும் பெரியதாக ஆகிவிடும்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *