“அகண்டா 2: பிரதமர் மோடி படம் பார்க்க ஆவலாக இருக்கிறார்” – போயபட்டி ஶ்ரீனு

Spread the love

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், போயபட்டி ஶ்ரீனு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றிபெற்ற படம் ‘அகண்டா’. இந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வந்தது ‘அகண்டா 2: தாண்டவம்.’

பான்-இந்திய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகை சம்யுக்தா, ஆதி பினிசெட்டி, கபீர் துஹான் சிங், ஹர்ஷாலி மல்ஹோத்ரா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சனாதன தர்மம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை முக்கிய கருப்பொருள்களாகக் கொண்டுள்ள இந்தப் படம், நேற்றுவரை (14-ம் தேதி) உலகளவில் ரூ.46 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அகண்டா 2: தாண்டவம்

அகண்டா 2: தாண்டவம்

இந்த நிலையில், நேற்று இரவு ஹைதராபாத்தில் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நந்தமூரி பாலகிருஷ்ணா, போயபட்டி ஶ்ரீனு, தமன் உள்ளிட்டப் படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு, “பிரதமர் மோடியிடம் “அகண்டா 2′ திரைப்படம் குறித்து கூறப்பட்டிருக்கிறது. இவ்வளவு நல்லப்படத்தை நாமும் பார்க்கலாமே… என பிரதமர் ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *