அகல் விளக்கும் அந்த ஒற்றைப் பென்சிலும்! – சிறுகதை

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சிறுவன் படிக்கும் அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெறும் இரு அறைகள்(அந்த இரு அறையை பிரிக்கக் கூடிய சுவர் மரப்பலகையால் செய்து நகர்த்தக் கூடிய சுவராகவே இருந்தது)     மட்டுமே கொண்ட சிறிய பள்ளி. அப்பள்ளியில் ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு அறையிலும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் ஒரு அறையில் இருந்தனர். அத்தொடக்கப் பள்ளியில் ஆண் பெண் இரு பாலரும் படிக்கக் கூடிய பள்ளியாக இருந்தது.

கிட்டத்தட்ட அறுபது மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளியாக இருந்தது. பள்ளியின் வெளிப்புறம் ஒரு தேசியக் கொடி கம்பம், சிறிய விளையாட்டு திடல், குடிநீர்த் தேக்கத் தொட்டிகள்(பெரியது, சிறியது) இருந்தது.பள்ளியின் சத்துணவு கூடம் ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இத்தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  ஒரு ஆசிரியரும், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், ஒரு சத்துணவு டீச்சரும் இருந்தனர். இத்தொடக்கப் பள்ளி கிராமத்து உட்புறம் அமைந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பாக காணபட்டது.

இத்தொடக்கப் பள்ளியின் வேலை நேரம் காலை 09:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை டைம் டேபிள் கொடுக்கப்பட்டது மாணவர்களுக்கு, சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. வாரத்தின் முதல் நாள் திங்கள் கிழமை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளியின் தேசியக் கொடிக் கம்ப மைதானத்தில் ஒன்று கூடினர் வரிசை வரிசையாக காலை வழிபாடுக்கு, அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஒருவனை அப்பள்ளியின் லீடராக தேர்வு செய்தனர்.

திருக்குறள் மற்றும் செய்தித்தாள் வாசிப்புக்கு தினமும்  நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு  படிக்கும் மாணவ மாணவிகள் வாசிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர், இதனை  மாணவ மாணவிகள் பேச்சித்திறனை  வளர்க்கும் ஒரு ஊத்தியாக பார்த்தனர். 

 தினமும் பள்ளி காலை வழிபாடு அதிகபட்சமாக 30 நிமிடம் முதல் குறைந்தபட்சமாக 15 நிமிடமாகவே இருந்தது. இப்பள்ளிக் காலை வழிபாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக்கொடி ஏற்றுதல், உறுதிமொழி எடுத்தல், திருக்குறள் மற்றும் செய்தித்தாள் வாசிப்பு, ஊக்கப்படுத்தும் மற்றும் உற்சாகப்படுத்தும் நன்றிவுரை இருந்தது. பள்ளிக் காலை வழிபாடு முடிந்தவுடன் டைம் டேபிள் படி வகுப்புக்கள் தொடங்கின!

ஆசிரியர் மாணவர்களின் காலை  வருகைப்பதிவேடு எடுத்து சரிசெய்து (தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல்) வீட்டுப்பாடத்தைத் விசாரித்து திருத்தம் செய்து புதிய வகுப்புக்களை தொடங்கினார்.

காலையில் மாணவர்களுக்கு குடித்தண்ணீர் குடிக்கும் இடைவேளையாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதே போல மதிய உணவு இடைவேளிக்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளையில் பள்ளி சத்துணவுக் கூடத்தில் சில மாணவர்கள் வரிசையாக உணவு பெற்று அறுந்தினர். சிலர்    வீட்டுக்கு சென்று உணவு அறுந்தும் மாணவர்களாக இருந்தனர். இடைவேளை முடிந்து மதிய வகுப்பு 2:00 மணிக்கு தொடங்கியது, அப்போது ஆசிரியர் மாணவர்களின் மதிய வருகைப்பதிவு செய்து டைம் டேபிள் படி வகுப்பை ஆரம்பித்தனர்.

ஆசிரியர் மாணவர்களின் மதிய சூழலை அறிந்து அடிக்கடி மாணவர்களிடம் பாடத்தில் கேள்வி கேட்டும், புத்தக வாசிக்கச் சொல்லியும் மதிய வகுப்பை உற்சாகமாகக் கொண்டு போனார். பின்னர் மாலை விளையாட்டு இடைவேளை அரை  மணி நேரம் விடப்பட்டது, மாணவர்கள் ஒவ்வொரு இடைவேளையின் பொழுது தங்களுக்குள் நொருக்கு தின்பண்டங்களை பரிமாரிக் கொண்டனர். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் அழைத்து விளையாட்டு, உடற்பயிற்சி,யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

பின்பு ஆசிரியர் பள்ளியின் லீடரை அழைத்து அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அறிவிப்பு ஒன்றை செய்தார், அதாவது ஒவ்வொரு இடைவேளையின் தொடக்கம் மற்றும் முடிவில் லீடர் மணி ஓசை எழுப்புவார் அதனைக் கேட்டு மாணவர்கள் பின் தொடர அறிவுரைத்தார்.

பின்னர் மாணவ மாணவிகள் சிறு சிறு அணியினை  உருவாக்கி அவர்களுக்கு  பிடித்த விளையாட்டுக்களான கொ-கொ, கபடி, ரன்னிங், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு மற்றும் ஈட்டி எறிதல் விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். இதில் சிறுவன் மற்றும் சில மாணவ மாணவிகளுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன! ஆசிரியர் அவர்களுக்கு  முதலுதவி பெட்டியை  அறிமுகப்படுத்தி அதன் மகத்துவத்தை எடுத்துரைத்து பயன்படுத்தும் முறையை செய்தும் காண்பித்தார்.பின்பு மாலை வேளையில் தேசியக் கொடி கம்ப திடலில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் ஒன்றுக் கூடி  தேசிய கீதம் பாடல் பாடி மகிழ்ந்து வீட்டிற்கு  சென்றனர்.

இப்படியே நாட்களும், மாதங்கள் கடந்து  ஒரு வருடமானது அனைத்து மாணவர்களும் பருவத் தேர்வுகள் (முதல் நிலை, காலண்டு ,இராண்டாம் நிலை, அரையாண்டு, திருப்புதல், முழாண்டு) முடிந்து அடுத்த வகுப்பிற்கு சென்றனர், சிறுவனும் இரண்டாம் வகுப்பிற்கு சென்றான். பள்ளி கோடை விடுமுறை முடிந்து கட்டிடப் பராமரிப்பு செய்யப்பட்டது. அதன்பின்னர் அனைத்து மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தனர்! அவையில் புதிய லீடர் தேர்வு செய்து பள்ளி காலை வழிபாடு முடிந்து வகுப்புக்கள் தொடங்கின! 

ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று தலைமை ஆசிரியரிடம் ஆசி வாங்கி வேறு பள்ளிக்கு சென்றனர், அப்போது ஒரு இளம் வயது பயிற்சி ஆசிரியர் பணியில் சேர வந்தார் அவரை அன்புடன் வரவேற்றது பள்ளி நிர்வாகம்! அவர் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி எடுக்க வந்தார், ஏனேன்றால் ஏற்கனவே இருந்த ஆசிரியர் ஓய்வு பெறும் வயதில் இருந்தார்.

அங்குள்ள மாணவர்களுக்கு இவரை பிடித்து போனது காரணம் பயிற்சி ஆசிரியரின் தொய்வில்லாத கலையான முகம்,புதுப்புது புராணக் கதைகள் சொல்லி கொடுக்கும், இதனை தினமும் கவனித்த ஓய்வு பெறும் ஆசிரியர் அவரிடம் என் மாணவச் செல்வங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன் பத்திரமாக பார்த்துக்கொள் எனக் கூறி சின்ன  பிரிவு உபசார விழா ஏற்று கணத்த இதயத்துடன் மாணவ மாணவிகளும் ஆசிரியரும் வீடு திரும்பினர்.மறுநாள் வழக்கம் போல வகுப்புகள் ஆரம்பித்தன! அப்போது பயிற்சி ஆசிரியர் நூறு மீட்டர் ரன்னிங் விளையாட்டு போட்டி நடத்த மூத்த தலைமை  ஆசிரியரிடம் அனுமதி பெற்று  மாணவர்களிடம் கூறினார்!

இதைக் கேட்ட சிறுவன் மற்றும் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியில் உறைந்தனர்! இருந்தாலும் ரன்னிங் போட்டி என்பதால் விருப்பமுள்ள பத்து  மாணவர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர் அதில் சிறுவனும் இருந்தான்! மாலை நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் ரன்னிங் போட்டிக்கான லைன் போட பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓடும் வீரர்கள் ஒரு கால் முட்டி  போட்டு வரிசையில் இருந்தனர், வீரர்களுக்கு இருபுறமும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி உற்சாகம் செய்தனர்! ஆசிரியர் விசில் ஊதியவுடன் வீரர்கள் ஓடச் செய்தனர் சிறுவனும் ஆர்வமாக ஓடினான், இரண்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் முட்டி கீழே விழுந்தனர், இன்னும் மூன்று வீரர்கள் ஓட முடியாமல் சோர்வடைந்து பாதியில் நின்றனர்.

மிதமுள்ள ஐந்து வீரர்களில் சிறுவனும் இருந்தான், போட்டியைப் பார்த்த மாணவ மாணவிகள் விசில் அடித்து உற்சாகப்படுத்தினர்! நூறு மீட்டர் எல்லைக் கோட்டை  கடந்த முதல் மற்றும்  இராண்டாம், மூன்றாம் மாணவர்களை பயிற்சி ஆசிரியர் கட்டிப் பிடித்து வரவேற்றார், சிறுவன் ஓடிவந்து நான்காம் இடத்தையே பிடித்தான்,சிறுவனை யாரும் வரவேற்று கட்டி தழுவவில்லை,இதனால் மனமுடைந்து பள்ளி கட்டிட சுவரில் சாய்ந்து  அமர்ந்தான்.

மாலை விளையாட்டு நேரம் முடிந்து தேசிய கீதம் பாட மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று கூடினர்! போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுக் கொடுக்க ஊர் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர்.

தலைவரும் சிறப்புறைச் செய்திக் கூறி முதலிடம் வென்ற மாணவருக்கு ஜாமென்ரி(வடிவியல்) பாக்ஸ் வழங்கப்பட்டது, இராண்டாமிடம் வென்ற மாணவருக்கு தேர்வெழுதும் அட்டை வழங்கப்பட்டது, மூன்றாமிடம் வென்ற மாணவருக்கு  தேர்வெழுதும் எழுதுகோள் பென் பாக்ஸ் வழங்கப்பட்டது,      அனைத்து மாணவர்களும் கைதட்டி உற்சாகம் கொடுத்தனர். சிறுவனும் சோர்வாக கைதட்டிக் கண்கலங்க நின்றுகொண்டிருந்தான்!

அதே  சமயம் தேசிய கீதமும் பாடி முடித்தனர், கடைசியாக தலைமை ஆசிரியர் போட்டியில் நான்காவது வந்த விடாமுயற்சி வீரர் எனக் கூறி   சிறுவனை அழைத்தார்!

இதனைக் கேட்ட அனைத்த மாணவ மாணவிகளும் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சிறுவனும் கண் கலங்கியபடி   கைதட்டும் வெற்றி ஓசையோடு பரிசு பெறும் இடத்தை நோக்கி நகர்ந்தான். தலைமையாசிரியர்  விடாமுயற்சி பற்றி சிறப்புரைக் கூறி சிறுவனுக்கு ஒரு  பென்சிலை ஆறுதல் பரிசாகக் கொடுத்தார், சிறுவனும் ஆனந்த கண்ணீர் மல்க சிரித்த முகத்துடன் பென்சிலை  இறுகப்பற்றினான்!

அனைத்து மாணவர்களும் வெற்றி மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை அறிந்து வீடு திரும்பினர். சிறுவனும் மகிழ்ச்சியாக  வீட்டை அடைந்து அகல் விளக்கை ஏற்றி பென்சிலை ரசித்து தொட்டு  பார்த்தான், இதனைப் பார்த்த அவனது பெற்றோர்கள் இப்பென்சில் எப்படிக் கிடைத்ததென்று கேட்டனர்! அதற்கு  சிறுவன் இது என் விடாமுயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி எனக் கூறினான்! இதனைக் கேட்ட பெற்றோர்கள் சிறுவனை  உறைந்துப் பார்த்து கட்டி பிடித்து அவனது வாழ்க்கையின் மிகப்பெரிய முதல் வெற்றியாகவே  கொண்டாடினர். 

விடாமுயற்சி வெற்றிகள் தொடரும்!!! 

உண்மையுள்ள 

ஆ.வினோத்குமார் 

தேர்தல்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *