இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெரும் மூன்றாவது தமிழர் கவிப்பேரரசு வைரமுத்து. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீட விருது வாங்கும் தமிழரான வைரமுத்துவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர். அதே நேரம் வைரமுத்து சில இலக்கிய வட்டங்களில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

குறிப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்படுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில், “‘ஞான பீட விருது வழங்கப்பட்டது. தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்கு சமம் வைரமுத்துவுக்கு கிடைத்த விருது, நவீன தமிழ் இலக்கியத்தை, 30 ஆண்டுகள் பின்னே தள்ளும்.
வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவர், போவர், சூழ்ச்சிகள் வழியாக அற்ப விருதுகளை ஈட்டுவர். இலக்கியம் என்றும் வெல்லும், வைரமுத்துவுக்கான எதிர்ப்பு என்பது, ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. நவீன தமிழ் இலக்கியம் தொடர்புடையது.