அக்னிவீரர்களுக்கு காவல்துறை உள்ளிட்டப் பணிகளில் 10% ஒதுக்கீடு: ஹரியாணா

Dinamani2f2024 062fcf31d2b8 8334 45ce B30b B6dfe5c260882fani 20240624152015.jpg
Spread the love

அக்னிவீரர்களுக்கு காவல்துறை, சுரங்கப் பாதுகாப்புப் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

ஹரியாணா முதல்வர் நயாப் சைனி இன்று வெளியிட்ட அறிவிப்பில், அக்னிவீரர்களுக்கு பணிக்காலத்துக்குப் பின் மாநில காவல்துறை மற்றும், சுரங்க பாதுகாப்பு, வனப் பாதுகாவலர் பணி, சிறைப் பாதுகாப்பு உள்ளிட்ட பணியிடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, இந்திய பாதுகாப்புப் படையில், அக்னிபாதை என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் நயாப் சைனி கூறியிருப்பதாவது, இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு நான்கு ஆண்டு கால பணி நிறைவுக்குப் பிறகு, பணி வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த இட ஒதுக்கீடு அமையும் என்று அறிவித்துள்ளார்.

அக்னிவீரர்கள் திட்டம், இளைஞர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் திட்டம் என்று காங்கிரஸ் விமர்சித்திருந்த நிலையில், ஹரியாணா மாநிலத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *