அக்ஷயம் 365 திட்டத்திற்காக ₹10 லட்சம் நிதி – வழங்கினார் ரமேஷ் ஸ்ரீநிவாசன், CEO, Agilysys Inc.,USA | Ramesh Srinivasan, President & CEO of Agilysys Inc., USA , has donated ₹10 lakhs towards AKSHAYAM 365

Spread the love

“அக்ஷயம் 365′ என்பது ‘MUDRA OOH’ நிறுவனமும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து செய்யும் ஒரு சிறிய முயற்சி ஆகும். இதன் முக்கிய நோக்கம் ஓர் உணவு மையம் தொடங்கி அங்கு அடுத்த 365 நாட்களுக்கும் தேவை இருப்பவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்பதே ஆகும்.

இந்த உணவு மையம் டி.நகர், பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தினமும் மதியம் 12 மணிக்கு, தேவைப்படும் யாருக்கும் மரியாதையோடும் அன்போடும் உணவு வழங்கப்படும்.

அஜிலிசிஸ் இன்க், அமெரிக்காவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரமேஷ் ஸ்ரீநிவாசன்,( President & CEO of Agilysys Inc., USA ) ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர்ஸ் & முத்ரா OOH ஆகியவற்றின் முன்முயற்சியான அக்ஷயம் 365 திட்டத்திற்காக ₹10 லட்சம் நிதியை வழங்கியுள்ளார்.

அக்ஷயம் 365 திட்டம் இன்றுவரை 10,000 மக்களுக்கு உணவளித்துள்ள நிலையில், இதுபோன்ற வளர்ந்து வரும் ஆதரவும் நன்கொடைகளும் மேலும் சேவை செய்வதற்கும் இந்த முயற்சியை விரிவுபடுத்துவதற்குமான உந்துதலை பலப்படுத்தியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *